TPR மகளிர் குழு உறுப்பினர்கள் இணைந்து நிகழ்த்திய மகளிர் ஒன்று கூடல் நிகழ்ச்சி ன்றிணைவோம்… உயர்வடைவோம்… என்ற நோக்கத்துடன் சிறு குழுவால் திட்டமிடப்பட்டு அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் முன்புற வரவேற்பு, பெயர் பதிவு, டோக்கன் வினியோகம், விளக்கேற்றல், இசைத்தட்டு இல்லாமல் அனைவருமே இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வாழ்த்து, வரவேற்புரை, குழந்தைகளின் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சிகள் என அழகாக அமைதியாக நடைபெற்றது.
பின் சில தலைப்புகளில் பேச அழைக்கப்பட்டவர்கள் மற்றும் சில தலைப்புகளில் பேச விருப்பம் தெரிவித்து முன் வந்தவர்களும் தங்கள் பேச்சு மூலம் சுவாரசியம் சேர்த்தனர்.தேனீர் சிற்றுண்டி இடையில் பறிமாறப்பட்டது
அதன் தொடர்ச்சியாக கலைகள், சிறுதொழில்கள், வீட்டுத்தோட்டம், குழந்தை வளர்ப்பு, ஆன்மிகம், இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பாரம்பரிய உணவு என பல தலைப்புகளில் ஆர்வம் உள்ளவர்கள் குழுக்களாக அமர்ந்து கலந்தாலோசித்து குறிப்புகள் எழுதப்பட்டன.
பின் அறுசுவை உணவு ஒருவருக்கொருவர் பரிமாறப்பட்டது.
உணவுக்குப்பின் குழுக்களில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் ஒவ்வொரு குழுவின் பிரதிநிதிகளால் வாசிக்கப்பட்டு பின் அவை தொகுக்கப்பட்டு தீர்மானங்களாக வாசிக்கப்பட்டு கரகோஷங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனிடையில் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் உற்சாகமாக நடத்தப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கும் சரிசமமாக பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கான விளையாட்டுக்கள், சிறப்புக் குலுக்கல், சிறப்புப் பரிசு வழங்கல் மற்றும் வருகை புரிந்த அனைவருக்கும் சிறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இறுதியாக சிறுதொழில் செய்யும் மகளிரின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு வரவேற்புடன் விற்பனை ஆனது.
இந்த நிகழ்ச்சி சிறப்புற நடக்க உறுதுணையாக இருந்த TPR நிர்வாகிகள், பரிசுகளுக்காக மனமுவந்து கேட்காமலே உதவி செய்தவர்கள், கேட்டவுடன் வழங்கியவர்கள், இறுதிவரை இருந்து நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய சகோதரிகள், தனித்திறமையால் வியக்கவைத்த குழந்தைகள், ஆலோசனை தந்து வழிநடத்தியவர்கள் என அனைவரும் மிகுந்த நன்றிக்குறியவர்கள். இனி நம் மகளிர் ஒன்றிணைந்து உயர்வடைவது உறுதி.