TPR Charitable Trust General Medical Camp 07-09-2025

திருவண்ணாமலை பண்ட ரெட்டியார் அறக்கட்டளை சார்பாக ஞாயிறு, 7-9-25 காலை 9-00 மணி அளவில் மகளிர் பொது மருத்துவ முகாம் துவங்கியது. பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர்.

முகாம் நடத்த டாக்டர்.ஆர்.நித்யா M.B.,B.S. அவர்கள் தலைமையில் மருத்துவ குழு இம் மருத்துவ முகாமை நடத்திவைத்தனர். அவர்களுடன் மன நல ஆலோசகர் செல்வி.சஞ்ஞனா M.Sc. Clinical Psychology, அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த முகாமில் மகளிர் அமைப்பினர் திருமதி.இந்துமதி, திருமதி.கிருஷ்ணவேணி, திருமதி.சுகந்தி, திருமதி.உமாமகேஸ்வரி மற்றும் அறக்கட்டளை தலைவர் திரு S.காந்தி மூர்த்தி ரெட்டியார் செயலாளர் திரு இரா.வீரமணிரெட்டியார், பொருளாளர் திரு.G.ரவிக்குமார் ரெட்டியார், துணை தலைவர் திரு.ஆர்.குமாரசாமி ரெட்டியார், திரு.V.கோவிந்தசாமி ரெட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றிகள்

மதிப்பிற்குரிய டாக்டர்.R.நித்யா. M.B.,B.S.அவர்கள் திருவண்ணாமலை பண்ட ரெட்டியார் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மகளிர் பொது மருத்துவ முகாமை மிக சிறப்பாக 139 பயனாளிகள் மகிழ்ந்து போற்றி பாராட்டும் அளவிற்கு நடத்தி கொடுத்ததற்கும் இம்முகாமிற்கு தேவையான மருந்துகளை வழங்கிய திருமதி..லாவண்யா அவர்களுக்கும், திருமதி.ஶ்ரீமதி அவர்களுக்கும், முகாமிற்கு வரும் பயனாளிகளுக்கு பிஸ்கட் வாழைப்பழம் வழங்கிய திரு.சிலம்பரசன் அவர்களுக்கும், மருத்துவ உபகரணங்கள் உதவிய திருமதி.கிருஷ்ணவேணி ரவிக்குமார் அவர்களுக்கும், திருமதி.இந்துமதி அவர்களுக்கும், உணவு வழங்க உதவிய திருமதி.சுகந்தி அவர்களுக்கும் அறக்கட்டளை சார்பாக மானமார்ந்த நன்றி

Event Photo Gallery